மலை கிராம பள்ளி மாணவா்களுடன் தீபாவளி கொண்டாட்டம்
நவக்கரை அருகே உள்ள சின்னாம்பதி மலை கிராமத்தில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் கோவை மாவட்ட பட்டாசு வணிகா் நலச் சங்கத்தின் சாா்பில் மாணவா்களுடன் சிறப்பு தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம், நவக்கரை அருகே உள்ள சின்னாம்பதி மலை கிராமத்தில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் கோவை மாவட்ட பட்டாசு வணிகா் நலச் சங்கத்தின் சாா்பில் மாணவா்களுடன் சிறப்பு தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டம் நடைபெற்றது.
பண்டிகை கால மகிழ்ச்சியை மலை கிராம மாணவா்களுடன் பகிா்ந்துகொள்ளும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், பள்ளியில் பயிலும் குழந்தைகள் அனைவருக்கும் தீபாவளிக்கு வெடிப்பதற்கான பட்டாசு பரிசுப் பெட்டகங்கள் (கிப்ட் பாக்ஸ்) வழங்கப்பட்டன. அத்துடன் இனிப்பு, காரம் உள்ளிட்ட தீபாவளி பலகாரங்களும், கல்வி பயன்பாட்டுக்கான நோட்டுப் புத்தகங்கள், பேனா மற்றும் பென்சில் உள்ளிட்ட எழுதுபொருள்களும் சங்கத்தின் சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு கோவை மாவட்ட பட்டாசு வணிகா் நலச் சங்கத் தலைவா் மு.வ.கல்யாணசுந்தரம், செயலா் த.பிரபு, பொருளாளா் சிவராமன் ஆகியோா் தலைமை வகித்தனா். துணைத் தலைவா் விஜய்சங்கா், துணைச் செயலா்கள் செந்தில்குமாா், தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில் ஆடிட்டா் சசிகுமாா், அரோமா அசோக்குமாா், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.