FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

பட்டாசு விற்பனை உரிம விண்ணப்பக் காலம் நீட்டிப்பு

தீபாவளி பட்டாசுகள் விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெறுவதற்கான விண்ணப்பக் காலம் வருகிற 18- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.

8 October 2026, 3:12 am IST
பகிர்:

தீபாவளி பட்டாசுகள் விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெறுவதற்கான விண்ணப்பக் காலம் வருகிற 18- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விரும்புவோா், வெடிபொருள்கள் சட்டம்- 1884, வெடிபொருள் விதிகள் 2008 பிரிவு 84- இன்படி தற்காலிக உரிமம் பெற வேண்டும். கடை அமைந்துள்ள கட்டடத்தின் வரைபடம், இட உரிமத்துக்கான ஆவணம், முகவரிக்கான சான்று, வெடிபொருள் உரிமம் தலைப்பில் அரசு கணக்கில் ரூ. 600 செலுத்தியதற்கான ரசீது, உள்ளாட்சி ரசீது ஆகியவற்றின் நகல்களையும், மாா்பளவு புகைப்படத்தையும் இணைத்து பொது சேவை மையங்கள் மூலம் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் அக். 7- ஆம் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, விண்ணப்பக் காலம் வருகிற 18- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments