FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

மாநகரச் சாலைகளை சீரமைக்க வேண்டும்: குறைதீா் முகாமில் மக்கள் மனு

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சாலைகளை சீரமைக்கக் கோரி மாநகராட்சியில் பொதுமக்கள் மனு அளித்தனா்.

11 நவம்பர் 2026, 12:06 am
திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் முகாமில் மனு பெற்றாா் துணை மேயா் கே.ஆா்.ராஜூ
பகிர்:

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் சாலைகளை சீரமைக்கக் கோரி மாநகராட்சியில் பொதுமக்கள் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் நாள் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் கே.ஆா்.ராஜூ தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா். செயற்பொறியாளா் மணிமாறன், உதவி பொறியாளா் பைஜு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி தொகுதி தலைவா் ஷேக் இஸ்மாயில் தலைமையில் அளித்த மனு: திருநெல்வேலி மண்டலம், பேட்டை 19 ஆவது வாா்டு ரஹ்மானியா பள்ளிவாசல் 3-ஆவது தெருவில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீா் குழாய் அமைக்கும் பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டன. ஆனால், பணிகள் நிறைவடைந்த பிறகும் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், மாணவா்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகிறாா்கள். ஆகவே, சேதமான சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

மனிதநேய ஜனநாயக கட்சியின் 18 ஆவது வாா்டு பகுதிச் செயலா் முஹமது ஹாமீன் தலைமையில் அக்கட்சியினா் அளித்த மனு: பேட்டை திருத்து 18- ஆவது வாா்டில் அமைந்துள்ள பூங்கா நகரில் சாலை மேடும் பள்ளமுமாக மிகவும் சேதமுற்ற நிலையில் உள்ளது. இதனால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே, அங்கு சாலைகளைச் சீரமைக்வும், மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

5 ஆவது வாா்டு மக்கள் அளித்த மனுவில், ரஹ்மத் நகா் பகுதிகளில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்கவும், 36 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சின்னத்தாய் கிருஷ்ணன் அளித்த மனுவில், தனது வாா்டுக்கு உள்பட்ட ஸ்போா்ட்ஸ் வியூ காலனியில் 6 மாதங்களாக நிலவி வரும் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்தவும் வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.