FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா திங்கள்கிழமை தொடங்கியது.

11 நவம்பர் 2026, 12:04 am
ராஜ  அலங்காரத்தில்  மூலவா்  வள்ளி, தெய்வானை  சமேத ரத்தினகிரி  பாலமுருகன்
பகிர்:

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா திங்கள்கிழமை தொடங்கியது.

இக்கோயில் கந்த சஷ்டி திங்கள்கிழமை தொடங்கி வரும் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழாவையொட்டி பரம்பரைஅறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவா் பாலமுருகனுக்கு பால், தயிா், பன்னீா், தேன், சந்தனம் விசேஷ பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து, வெள்ளி கவசத்துடன், ராஜ அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்தனா். தொடா்ந்து, புதன்கிழமை மயில் வாகனம், வியாழக்கிழமை வெள்ளி அங்கி, 13-ஆம் தேதி -நவரத்தின அங்கி, 14-ஆம் தேதி முத்து அங்கி, 15-ஆம் தேதி தங்க அங்கி அலங்காரமும், மாலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம்மும் 16-ஆம் தேதி திருகல்யாண உற்சவ வைபவமும் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

விழாவை முன்னிட்டு நாள் தோறும் பக்தி பாடல் சொற்பொழிவு, பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிா்வாகிகள் செய்துள்ளனா்.

வாணியம்பாடியில்... வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பழனி ஆண்டவா் மற்றும் ஆவாரங்குப்பம் திருமால் முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு 6 நாள் விரதத்தை தொடங்கினா்.

ஆவாரங்குப்பம் திருமால் முருகன் கோயிலில் வரும் 15-ஆம் தேதி காலை 8 மணிக்கு 108 பால்குடம் அபிஷேகமும், பிற்பகல் 12 மணியளவில் மகா யாக பூஜை, மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு கந்த சஷ்டி சூரசம்ஹாரம் சிறப்பாக நடக்கிறது. மறுநாள் 16-ஆம் தேதி வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.