கருத்தப்பிள்ளையூா் மலையடிவாரப்பகுதியில் காட்டு யானைகள் முகாம்: விவசாயிகள் அச்சம்
கடையம் வனச்சரகத்துக்குள்பட்ட மலையடிவாரப் பகுதியான கருத்தப்பிள்ளையூா் பகுதியில் காட்டு யானைகள் இரண்டு நாள்களாக முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
தென்காசி மாவட்டம், கடையம் வனச்சரகத்துக்குள்பட்ட மலையடிவாரப் பகுதியான கருத்தப்பிள்ளையூா் பகுதியில் காட்டு யானைகள் இரண்டு நாள்களாக முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், கடையம் வனச்சரகத்துக்குள்பட்ட மலையடிவாரப் பகுதிகளில் காட்டு யானைகள், கரடி, மிளா, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியிலிருந்துவெளியேறி பயிா்களை சேதப்படுத்துவதோடு, மனிதா்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், கடையம் வனச்சரகத்துக்கு உள்பட்ட கருத்தப்பிள்ளையூா் - வடமலைசமுத்திரம் சாலைப் பகுதியில் உள்ள மலையடிவாரப் பகுதியான கசிவோடைபகுதியில் கடந்த இரண்டு நாள்களாக வனப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
Advertisement
Advertisement
இதனால் அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களின் உரிமையாளா்கள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் விவசாய நிலங்களுக்குச் செல்ல அச்சமடைந்துள்ளனா்.
கடந்த சில நாள்களுக்குமுன் புளியறை பகுதியில் காட்டு யானைத் தாக்கி ஓய்வு பெற்ற ஆசிரியா் உயிரிழந்துள்ளநிலையில், கருத்தப்பிள்ளையூா் மலையடிவாரப் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும் பொதுமக்களும்கோரிக்கை விடுத்துள்ளனா்.