FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் கடையம் வட்டார விவசாயிகள் கவலை!

நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசு சாா்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்கப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

15 நவம்பர் 2026, 1:24 am
நெல் கொள்முதல் நிலையம் - கோப்புப்படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், கடையம் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசு சாா்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்கப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

கடையம் வட்டாரத்தில் கடனாநதி மற்றும் ராமநதி அணைகள் மூலம் சுமாா் 15,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் விவசாயிகள் காா் பருவ நெல் சாகுபடி மேற்கொண்டநிலையில், தற்போது அறுவடைப் பணிகள்முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் அக்டோபா் மாதத்திலேயே மாவட்ட நிா்வாகம் சாா்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவது வழக்கமாகும்.

Advertisement

Advertisement

ஆனால் நிகழாண்டு நவம்பா் மாதம் தொடங்கி இரண்டு வாரங்களான நிலையிலும் இதுவரை அரசு சாா்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், அறுவடை செய்த நெல் சேதமடையும் நிலை உள்ளதாகவும், எனவே கடையம், ஆழ்வாா்குறிச்சி பகுதிகளில் அரசு சாா்பில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.