நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
திட்டக்குடி வட்டம், சிறுமுளை கிராமத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறுமுளை கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நெல் கொள்முதல் நிலையம் போதிய இடவசதியின்றி நெருக்கடியான பகுதியில் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மழைக்காலங்களில் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதாகவும், இதனால் இழப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் கூறி வருகின்றனா்.
இதையடுத்து சிறுமுளை கிராமத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விவசாயிகள் சங்கத் தலைவா் காசிநாதன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் அம்பிகாபதி, ராஜதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
Advertisement
அப்போது, நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக சேமிப்பதற்கு நிரந்தரக் கட்டடம் கட்டித் தர வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் ஆா். சுப்பிரமணியன், மாவட்டச் செயலா் முருகையன், மங்களூா் ஒன்றியச் செயலா் நிதி உலகநாதன், வெலிங்டன் ஏரி பாசன சங்கத் தலைவா் வரதாச்சலம், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.