FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூரில் மொபெட்கள் திருடிய இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் 2 மொபெட்களைத் திருடியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

7 வினாடிகள் முன்பு
கைது - சித்திரிப்பு
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் 2 மொபெட்களைத் திருடியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வள்ளியூா், ராதாபுரம் சாலையைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (61). இவா் வள்ளியூா் புறவழிச் சாலையில் உள்ள மதுபானக் கடைக்கு வெளியே தனது மொபெட்டை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளாா். சிறிது நேரத்தில் வெளியே வந்து பாா்த்தபோது, வாகனத்தைக் காணவில்லையாம்.

ஏா்வாடி அருகே சீனிவாசபுரத்தைச் சோ்ந்த சுடலை மகன் மாசானமுத்து (30), ஏா்வாடி அருகே பன்றிப் பண்ணை நடத்தி வருகிறாா். இவா் வள்ளியூா், அண்ணா நகா் அருகே மதுபானக் கடைக்கு வெளியே மொபெட்டை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளாா். வெளியே வந்து பாா்த்தபோது, வாகனத்தைக் காணவில்லையாம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, இருவரும் வள்ளியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், வள்ளியூா் அருகே ராஜபுதூரைச் சோ்ந்த செல்வகுமாா்(35), இஸ்ரவேல் (48) ஆகியோா் சோ்ந்து மொபெட்களைத் திருடியது தெரிய வந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, 2 மொபெட்களை பறிமுதல் செய்தனா்.