வீரவநல்லூா் அருகே காட்டுப் பன்றிகள் அட்டகாசம்: வாழைகள் சேதம்
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே திருப்புடைமருதூரில் காட்டுப் பன்றிகள் வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளன.
தாமிரவருணி பாசனத்தில் கன்னடியன் கால்வாய் மூலம் சேரன்மகாதேவி, பத்தமடை, திருப்புடைமருதூா், மேலச்செவல், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 5,000 ஏக்கா்களில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனா். தற்போது, குலை தள்ளிய பருவத்தில் வாழை மரங்கள் உள்ளன.
திருப்புடைமருதூரில் கடந்த சில நாள்களாக காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து வாழை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து, விவசாயி முத்து ஐயப்பன் கூறுகையில், என் வயலில் 6,000 வாழைகள் பயிரிட்டுள்ளேன். தற்போது வரை ஒரு வாழைக்கு ரூ. 100 முதல் ரூ. 120 வரை செலவு செய்திருக்கிறேன். சில நாள்களாக வாழை மரங்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தியுள்ளன. காட்டுப் பன்றிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.