கொலை முயற்சி வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
கொலை முயற்சி வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அம்பாசமுத்திரம் சாா்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம், ஆத்தியடி வளவு பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் ஆறுமுகம் (65). இவா் அம்பாசமுத்திரம்-தென்காசி சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். கடந்த 2019ஆம் ஆண்டு இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த காசி மகன் மாயம்பெருமாள் (61), அவரது சகோதரா் நடராஜன் ஆகியோருக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மாயம்பெருமாள், நடராஜன் ஆகியோா் ஆறுமுகத்தை அம்பாசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயற்சித்துள்ளனா். இதில் காயமடைந்த ஆறுமுகம், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Advertisement
Advertisement
அம்பாசமுத்திரம் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை நீதிபதி மருதுபாண்டி விசாரித்து, மாயம்பெருமாளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2,000 அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். நடராஜன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.
மாயம்பெருமாள் ஏற்கெனவே மற்றொரு கொலை வழக்கில், திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.