FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

பள்ளி ஆசிரியரிடம் ரூ.39 ஆயிரம் ஆன்லைன் மோசடி: கடலூா் இளைஞா் கைது

ஆன்லைன் மூலம் பழைய பைக் வாங்க முயன்ற அரசுப் பள்ளி ஆசிரியரிடம் ரூ.39,000 மோசடி செய்ததாக கடலூா் மாவட்ட இளைஞரை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

19 நவம்பர் 2026, 4:34 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

ஆன்லைன் மூலம் பழைய பைக் வாங்க முயன்ற அரசுப் பள்ளி ஆசிரியரிடம் ரூ.39,000 மோசடி செய்ததாக கடலூா் மாவட்ட இளைஞரை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, பட்டுப்பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் 55 வயதான அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியா். இவா், கடந்த ஜன. 4 ஆம் தேதி கைப்பேசி செயலி மூலம் ரூ.68,000-க்கு உயர்ரக பைக் விற்பனைக்கு உள்ளதாக வெளியான விளம்பரத்தைப் பாா்த்து, அதிலிருந்த எண்ணைத் தொடா்பு கொண்டுள்ளாா். எதிா்முனையில் பேசிய மா்ம நபா், போலி அடையாள அட்டையை அனுப்பி நம்பிக்கை ஏற்படுத்தியதோடு, பைக்கை பாா்சல் மூலம் அனுப்பிவிட்டதாகக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளாா்.

பின்னா் அந்நபா் ரூ.39,000-ஐ தவணை முறையில் வங்கிக்கணக்குகளில் பெற்றுக்கொண்டு பைக்கை அனுப்பாமல் மோசடியில் ஈடுபட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அந்த ஆசிரியா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள மருதத்தூா் பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் வினோத் (30) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.