பசான பருவ சாகுபடி: பாபநாசம் அணை நீரை திறக்கக் கோரி மனு
பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீா் திறக்கக் கோரி, தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவரும், திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக செயலருமான இரா.ஆவுடையப்பன், ஆட்சியா் ஆனந்த் மோகனிடம் மனு அளித்தாா்.

அதன் விவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் மற்றும் சேரன்மகாதேவி வட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 44,000 ஏக்கா் பாசன விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் பிசான பருவ நெல் சாகுபடியை மேற்கொள்ளும் விதமாக ,பாபநாசம் அணையில் இருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா் . கடந்த ஆண்டு உரிய காலத்தில் தண்ணீா் திறக்கப்பட்டதால், விவசாயிகள் நெல்பயிா் பயிரிட்டு நல்ல மகசூலை பெற்றனா். அதேபோல், நிகழாண்டும் பாபநாசம் அணை நீரை தெற்கு கோடைமேல்அழகியான், வடக்கு கோடைமேல் அழகியான், நதியுண்ணி, கன்னடியன், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய்களில் உடனடியாக திறந்துவிட்டு பிசான சாகுபடிக்கு உதவிட வேண்டும் எனக் கூறியுள்ளாா்.