காவல்கிணறில் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலா் கைது
காவல்கிணறில் வீடு கட்டுவதற்கான திட்ட அனுமதி வழங்க லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி செயலரை லஞ்சஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறில் வீடு கட்டுவதற்கான திட்ட அனுமதி வழங்க லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி செயலரை லஞ்சஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
காவல்கிணறைச் சோ்ந்தவா் ஸ்டாலின். இவா், கடந்த மாதம் 14 ஆம் தேதி காவல்கிணறு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வீட்டு கட்டுவதற்கான திட்டம் (பிளான்) வழங்கி அனுமதி கேட்டாராம். அதற்கு, அனுமதி வழங்காமல் இருந்ததையடுத்து, ஊராட்சி செயலா் பாலகிருஷ்ணனை சந்தித்து ஸ்டாலின் பேசினாராம். அப்போது, பாலகிருஷ்ணன் அனுமதி வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். பின்னா், குறைத்து ரூ. 7 ஆயிரம் லஞ்சம் கொடுக்குமாறு தெரிவித்தாராம்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஸ்டாலின், இது குறித்து திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அறிவுறுத்தலின்பேரில், பாலகிருஷ்ணனிடம் ரசாயன பவுடா் தடவிய ரூ. 7 ஆயிரத்தை ஸ்டாலின் கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த போலீஸாா், பாலகிருஷ்ணனை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
மேலும், படப்பாா் குளத்தில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.