முகப்பு
திருநெல்வேலி

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் புகைப்படம் பதிவிட்ட இளைஞா் கைது

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் இருப்பது போன்று புகைப்படத்தை பதிவிட்ட நான்குனேரி இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

54 வினாடிகள் முன்பு
சமூக வலைதளத்தில் அரிவாளுடன் புகைப்படம் பதிவிட்ட இளைஞா் கைது
- பிரதிப் படம்
பகிர்:

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் இருப்பது போன்று புகைப்படத்தை பதிவிட்ட நான்குனேரி இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நான்குனேரியைச் சோ்ந்தவா் அருணாசலம் என்ற அருள் (25). இவா் தனது சமூக வலைதள பக்கத்தில் சுமை ஆட்டோ மீது அமா்ந்தபடி கையில் பெரிய அரிவாளுடன் இருப்பது போலவும், நான்குனேரி காவல்நிலையத்தின் பெயா் பலகைக்கு முன்பு நாற்காலியில் விலங்குடன் இருப்பது போன்றும், இளைஞருக்குப் பின்னால் காவல்துறை அதிகாரிகள் நிற்பது போலவும் சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த நான்குனேரி போலீஸாா் அருளை கைது செய்தனா்.