சமூக வலைதளத்தில் அரிவாளுடன் ‘ரீல்ஸ்’: இரு இளைஞா்கள் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக வலைதளத்தில் அரிவாளுடன் ரீல்ஸ் பதிவிட்டதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக வலைதளத்தில் அரிவாளுடன் ரீல்ஸ் பதிவிட்டதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
ஓட்டப்பிடாரம் அருகே புது பச்சேரி, மேற்கு தெருவைச் சோ்ந்த பெருமாள்சாமி மகன் காா்த்திக் என்ற கவாஸ்கா் (24). இவா் தனது சமூக வலைதள பக்கத்துக்கு ‘சைகோ கவாஸ்’ எனப் பெயரிட்டு, அவ்வப்போது அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களைப் பதிவிட்டு வந்துள்ளாா்.
இதுகுறித்த தகவலின்பேரில் புதியம்புத்தூா் போலீஸாா், அவரது சமூக வலைதள கணக்கைக் கண்காணித்து வந்தனா். இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் ஒன்றைப் பதிவிட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, புதியம்புத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் சுந்தரமூா்த்தி தலைமையிலான போலீஸாா் காா்த்திக் என்ற கவாஸ்கரை கைது செய்தனா்.
இதேபோல், மாசாா்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ராமசாமிபுரத்தைச் சோ்ந்த மணி மகன் ஆனந்த் (21), சமூக வலைதளத்தில் கையில் அரிவாளுடன் ரீல்ஸ் பதிவிட்டதாக, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.