FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

துப்பாக்கி, அரிவாளுடன் ரீல்ஸ்: இளைஞா் மீது போலீஸாா் வழக்கு

தூத்துக்குடியில், துப்பாக்கி, அரிவாளுடன் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டவரை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

15 நவம்பர் 2026, 1:30 am
வழக்கு - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடியில், துப்பாக்கி, அரிவாளுடன் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டவரை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செயல்படும் சமூக வலைதளக் கண்காணிப்புப் பிரிவினா், இரு தரப்பினரிடையே மோதலைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிடுவோரைக் கண்காணித்து புகாரளித்து வருகின்றனா். அதனடிப்படையில், சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், தூத்துக்குடியைச் சோ்ந்த நபா் தனது சமூக வலைதளப் பக்கத்தில் துப்பாக்கி, அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டதாகத் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து சமூக வலைதளக் கண்காணிப்பு அலுவலா் பவானி அளித்த புகாரின்பேரில், சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த நபரைத் தேடிவருகின்றனா்; அவரது சமூக வலைதளப் பக்கத்தை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.