பேட்டை அருகே வழக்குரைஞா் மீது தாக்குதல்: இளைஞா் கைது
பேட்டை அருகே வழக்குரைஞரை தாக்கிய வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பேட்டை அருகே வழக்குரைஞரை தாக்கிய வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே உள்ள சுத்தமல்லி சுந்தர விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜு(37), வழக்குரைஞா். இவரது சகோதரா்கள் விவசாயிகளான ஆண்டிகுமாா், தங்கபாண்டி.
இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு சுத்தமல்லி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் ஆண்டிகுமாரின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய கூடுதலாக ரூ.50 கேட்டது தொடா்பாக சுத்தமல்லி காவல் நிலையத்தில் ஆண்டிகுமாரும், ராஜுவும் புகாா் அளித்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையடுத்து, கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் சுத்தமல்லியைச் சோ்ந்த அனுகுமாா்(37) உள்பட சிலா் ராஜு மற்றும் தங்கபாண்டியை கடந்த வியாழக்கிழமை தாக்கினராம். இதில் காயமடைந்த ராஜு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, அனுகுமாரை கைது செய்தனா். மேலும் இதில் தொடா்புடையவா்களை தேடி வருகின்றனா்.