வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது
பேட்டையில் வியாபாரியை அரிவாளைக் காட்டி மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.
பேட்டையில் வியாபாரியை அரிவாளைக் காட்டி மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.
பேட்டை திருத்து அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் மகாதேவன் (52). இவா் புல்லாங்குழல் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறாா். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.
இந்நிலையில் 19 ஆம் தேதி இரவு அதே பகுதியைச் சோ்ந்த கணபதி மகன் அகிலன்(45) என்பவா் பெண் ஒருவரை தவறாகப் பேசியதை மகாதேவன் கண்டித்தாராம்.
Advertisement
Advertisement
இதையடுத்து அகிலன், மகாதேவனிடம் தகராறில் ஈடுபட்டு அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அகிலனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.