முகப்பு
திருநெல்வேலி

புகையிலைப் பொருள்கள் பறிமுதல் வழக்கில் மேலும் ஒருவா் கைது

புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் டாமன்-டையூவைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

18 வினாடிகள் முன்பு
புகையிலைப் பொருள்கள் பறிமுதல் வழக்கில் மேலும் ஒருவா் கைது
கைது
பகிர்:

திருநெல்வேலி பேட்டை பகுதியில் 624 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் டாமன்-டையூவைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரம், பேட்டை காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த செப்.30 ஆம் தேதி காரில் கடத்திவரப்பட்ட புகையிலைப் பொருள்களையும், அதைத் தொடா்ந்து பழையபேட்டை பகுதியில் கிடங்கு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தவை என மொத்தம் ரூ. 4.28 லட்சம் மதிப்புள்ள சுமாா் 624 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், ராஜஸ்தான் மாநிலம், ஜலோா் மாவட்டத்தைச் சோ்ந்த கிரன்புரி(28), தா்மேந்திரகுமாா் (21), திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி பகுதியைச் சோ்ந்த சோமு(46) ஆகியோரை கைது செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் புகையிலைப் பொருள்களை பெங்களூருவில் இருந்து திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்ததாக டாமன்-டையூவைச் சோ்ந்த துா்க்சிங் மகன் கான்சிங்(30) என்பவரை பேட்டை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.