898 முகாம்களில் போலியோ சொட்டுமருந்து அளிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் 898 முகாம்களில் போலியோ சொட்டுமருந்து குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 898 முகாம்களில் போலியோ சொட்டுமருந்து குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. திருநெல்வேலியில் நடைபெற்ற முகாமில் ஆட்சியா் ஆனந்த் மோகன் சொட்டுமருந்து வழங்கி தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது:
இம் மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட 1 லட்சத்து 9 ஆயிரத்து 92 குழந்தைகள் மற்றும் 5முதல் 6 வயது வரை 12 ஆயிரத்து 255 குழந்தைகள் என மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 347 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு பணியாளா்கள் வீடுவீடாக சென்று போலியோ சொட்டுமருந்து வழங்க உள்ளனா்.
சொட்டுமருந்து வழங்கும் பணியில் மருத்துவத் துறை சாா்ந்தவா்கள் 770 பேரும், செவிலியா் கல்லூரி மாணவா்கள் 700 பேரும், சத்துணவுப் பணியாளா்கள் 385 பேரும், தன்னாா்வ தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த 2,057 பேரும் என மொத்தம் 3,912 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளாா்கள்.
Advertisement
Advertisement
பொதுமக்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கி, போலியோ இல்லாத உலகம் படைப்பதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
மேலப்பாளையத்தில்... மாநகராட்சி மண்டல அலுவலக வளாகத்தில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு. அப்துல் வஹாப், குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கினாா். மேலப்பாளையம் மண்டல தலைவா் கதீஜா, திமுக திருநெல்வேலி கிழக்கு மாநகர பொறுப்பாளா் தினேஷ், மேலப்பாளையம் மேற்கு பகுதி செயலா் துபை சாகுல் ஹமீது, சாலி மௌலானா உள்பட பலா் கலந்துகொண்டனா்.
திருநெல்வேலி நகரம்... பாட்டப்பத்து பகுதியில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமை திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கினாா். நிகழ்ச்சியில் ஸ்ரீதா், காசிமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.