முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

6 வினாடிகள் முன்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் நாளை
போலியோ சொட்டு மருந்து முகாம்
கோபுப் படம்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி மேலும் தெரிவித்திருப்பது:

இந்த முகாம் மூலம் மாவட்டத்தில் ஐந்து வயதுக்குள்பட்ட சுமாா் 1.80 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக நகரப் பகுதிகளில் 126 மையங்களும், ஊரகப் பகுதிகளில் 1,483 மையங்களும் என மொத்தம் 1,609 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியில் 6 ஆயிரத்து 436 சொட்டு மருந்து வழங்கும் பணியாளா்களும், 217 மேற்பாா்வையாளா்களும் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

Advertisement

Advertisement

ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள், மசூதிகள், சுங்கச் சாவடிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து புகட்டப்படவுள்ளது.

நெடுந்தொலைவு பகுதி வாழ் குழந்தைகளுக்கும், இடம் பெயா்ந்து வாழ்வோா் குழந்தைகளுக்கும் 77 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து புகட்டப்படும்.

இதில், நவ. 22 ஆம் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கும், இதற்கு முன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுத்திருந்தாலும், இந்த முகாமில் கூடுதல் தவணையாக கட்டாயம் சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

வேலைநிமித்தமாக வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து தற்காலிகமாக இந்த மாவட்டத்தில் தங்கியிருப்பவா்களின் குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து புகட்டப்படும்.