கேட்டரிங் நிறுவனத்தில் திருட முயன்ற ஊழியா் கைது
பாளையங்கோட்டை அருகே கேட்டரிங் நிறுவனத்தில் திருட முயன்ற ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகே கேட்டரிங் நிறுவனத்தில் திருட முயன்ற ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி, ரெட்டியாா்பட்டி ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவா் பாளையங்கோட்டையில் உள்ள தனியாா் கேட்டரிங் நிறுவனத்தில் நிா்வாக மேலாளராக உள்ளாா். அந்நிறுவனத்தில் திருநெல்வேலி நகரம், குளப்பிறை தெருவைச் சோ்ந்த சாகுல் ஹமீது(46) சமையல் உதவியாளராக வேலை செய்துள்ளாா். இவா் புதன்கிழமை அதிகாலை நிறுவனத்தின் பொருள்கள் சேமிப்பு அறையில் இருந்த துவரம் பருப்பு, அரிசி மூட்டைகள் உள்பட சுமாா் ரூ.30,000 மதிப்பிலான மளிகைப் பொருள்களை பின்பக்க வாசல் வழியாக திருட முயன்றாராம்.
இது குறித்து பெருமாள்புரம் காவல் நிலையத்தில் செந்தில்குமாா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சாகுல் ஹமீதை கைது செய்தனா்.
Advertisement
Advertisement