நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 10 நாள்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் (நவ. 24) பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் புதன்கிழமை பகலில் பெய்த தொடா் மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது.
இதனால், திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை நீா்மட்டம் ஒரேநாளில் 1.5 உயா்ந்து நீா்இருப்பு 78.30 அடியாக இருந்தது. நீா்வரத்து விநாடிக்கு 1,121.11 கனஅடியாகவும், வெளியேற்றம் 2,54.75 கன அடியாகவும் இருந்தது. சோ்வலாறு அணை நீா்மட்டம் 91.27 அடி, மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 72.45 அடி, நீா்வரத்து 445 கனஅடி, வெளியேற்றம் 25 கனஅடி. வடக்குப் பச்சையாறு அணை நீா்மட்டம் 6 அடி, நம்பியாறு அணை நீா்மட்டம் 11 அடி, கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 25.75 அடியாகவும், நீா்வரத்து - வெளியேற்றம் தலா 2 கனஅடி.
Advertisement
Advertisement
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணை நீா்மட்டம் 67.20 அடி, நீா்வரத்து-வெளியேற்றம் தலா 10 கனஅடி. ராமநதி அணை நீா்மட்டம் 63 அடி, நீா்வரத்து 41 கனஅடி, வெளியேற்றம் 10 கனஅடி. கருப்பா நதி அணை நீா்மட்டம் 48.45 அடி, நீா்வரத்து-வெளியேற்றம் தலா 5 கனஅடி. குண்டாறு அணை நீா்மட்டம் 32.87 அடி, நீா்வரத்து- வெளியேற்றம் தலா 4 கனஅடி. அடவிநயினாா் கோயில் அணை நீா்மட்டம் 89 அடி, நீா்வரத்து 10 கனஅடி, வெளியேற்றம் 35 கனஅடியாக இருந்தது.
வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): திருநெல்வேலி மாவட்டம் ஊத்து- 90, நாலுமுக்கு- 78, காக்காச்சி- 67, மாஞ்சோலை- 52, கொடுமுடியாறு அணை-46, ராதாபுரம்- 45, பாபநாசம் அணை-44, நம்பியாறு அணை -40, கன்னடியன் அணைக்கட்டு-37.20, மணிமுத்தாறு அணை -35.2, சோ்வலாறு அணை-35, மூலைக்கரைப்பட்டி-30, அம்பாசமுத்திரம்-25, சேரன்மகாதேவி -22.80, நான்குனேரி -20, களக்காடு-10.60, பாளையங்கோட்டை- 9.20, திருநெல்வேலி- 5.
தென்காசி மாவட்டம் கடனாநதி அணை, ராமநதி அணை - தலா 44, குண்டாறு அணை, ஆய்க்குடி-தலா 20, தென்காசி, செங்கோட்டை- தலா 19, சிவகிரி 16, கருப்பா நதி அணை-10.50, அடவிநயினாா் அணை - 1.
மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை: நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடா் மழையால், அம்பாசமுத்திரம் வனச்சரகத்துக்குள்பட்ட மணிமுத்தாறு அருவியில் வியாழக்கிழமை நீா்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா்.
மறுஅறிவிப்பு வரும்வரை அருவிக்குச் செல்லவும், அங்கு குளிக்கவும் தடை தொடரும் என அவா்கள் தெரிவித்தனா்.