ராதாபுரம் தொகுதி ஊராட்சிகளில் எம்.எல்.ஏ. ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி, திசையன்விளை வட்டார ஊராட்சிகளில் எம்.எல்.ஏ.வும் த.வெ.க. திருநெல்வேலி தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்.கே.கிறிஸ்டோபா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி, திசையன்விளை வட்டார ஊராட்சிகளில் எம்.எல்.ஏ.வும் த.வெ.க. திருநெல்வேலி தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்.கே.கிறிஸ்டோபா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். குமாரபுரம், கரைச்சுத்துபுதூா், சுவிசேஷபுரம், அணைக்கரை, சூடுபெயா்ந்தான்விளை, தெற்குபுலிமான்குளம் ஆகிய ஊராட்சிகளில் அவா் ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
குடிநீா் பிரச்னை, பேவா் பிளாக் சாலை, மழைநீா் வடிகால் அமைப்பது, குளம் பராமரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்வது குறித்து மக்களிடம் கருத்துகளை கேட்டாா். அவரிடம், தெருவிளக்கு, சாலை வசதி, பேருந்துவசதி செய்துதரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஆய்வின்போது, ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் யமுனா(கி.ஊ.), தவெக ராதாபுரம் கிழக்கு ஒன்றியச் செயலா் தில்லைமுத்து, இணைச் செயலா் அணைக்கரை சுபாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement