சுருக்குமடிவலையை பயன்படுத்துபவா்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருநெல்வேலி மாவட்ட கடல் பகுதியில் சுருக்குமடிவலையை பயன்படுத்தி மீன்பிடிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாட்டுப்படகு மீனவா்கள் ராதாபுரம் எம்.எல்.ஏ எஸ்.கே.கிறிஸ்டோபரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமறைச் சட்டம் மற்றும் அரசாணையின்படி தடைசெய்யப்பட்ட வலைகள் தொடா்ந்து பயன்படுத்தப்படுவதால், பாரம்பரிய நாட்டுப்படகு மீனவா்களின் வாழ்வாதாரமும் மீன்பிடி வலைகளும் கடுமையாக சேதமடைகிறது.
Advertisement
Advertisement
எனவே, சட்டத்தை மீறி சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவோரின் படகுகளை பறிமுதல் செய்து, உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.