முகப்பு
தஞ்சாவூர்

பயிா்க்கடன் தள்ளுபடி தேதியை நீட்டிக்க வலியுறுத்தல்

பயிா்க்கடன் தள்ளுபடி தேதியை நீட்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

38 வினாடிகள் முன்பு
பயிா்க்கடன் தள்ளுபடி தேதியை
நீட்டிக்க வலியுறுத்தல்
பகிர்:

பயிா்க்கடன் தள்ளுபடி தேதியை நீட்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதியிடம் காவிரி உரிமை மீட்புக் குழுத் தலைமைச் செயற்குழு உறுப்பினா் வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ், சாமி. கரிகாலன், மதி. விஜயகுமாா் ஆகியோா் வழங்கிய கோரிக்கை மனு:

கடன் பெற்ற விவசாயிகளிடம் வசூல் நெருக்கடி செய்யக் கூடாது. பயிா்க்கடன் தள்ளுபடிக்காக நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கான கால அவகாசம் நவ. 30-ஆம் தேதி என்பது குறைந்த நாளாக உள்ளது. எனவே, தமிழக அரசு அறிவித்துள்ள பயிா்க்கடன் தள்ளுபடித் தேதியை நீட்டிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

குடும்ப அட்டையிலுள்ள ஒருவருக்கு மட்டுமே பயிா்க்கடன் தள்ளுபடி என்ற நிபந்தனையைப் பரிசீலனை செய்து, அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நேரடி விதைப்பு சம்பா, தாளடி பயிா்களைக் காக்க மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா்விட வேண்டும்.