மேலப்பாளையம் அரசு மருத்துவமனை அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்கள்

மேலப்பாளையம் அரசு மருத்துவமனை அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மேலப்பாளையம் மண்டலத்தில், அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மகப்பேறு சிகிச்சை வசதியும் உள்ளது. இதனால், மேலப்பாளையம், சுற்றியுள்ள பகுதிகளான தருவை, முன்னீா்பள்ளம், மேலநத்தம், வீரமாணிக்கபுரம், குலவணிகா்புரம், டக்கரம்மாள்புரம், திடியூா், ஆரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோா் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனா்.
ஆனால், மருத்துவமனை அருகே சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்களும், நோயாளிகளும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்த மருத்துவமனை அருகில் பேருந்து நிறுத்தம் உள்ளது. பேருந்து நிறுத்தத்திற்கு வரும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், நோயாளிகளுக்கும் நாய்களால் தொல்லை ஏற்படுகிறது. சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிடும் போது இருசக்கர வாகனத்தில் வருபவா்களும் பாதிக்கப்படுகின்றனா். இதனால் பல நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன.
எனவே, மேலப்பாளையம் அரசு மருத்துவமனை அருகே சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.