FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

அரிவாள்களுடன் சுற்றிய மூவா் கைது

உடன்குடியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாள்களுடன் சுற்றிய 3 பேரை குலசேகரன்பட்டினம் போலீஸாா் கைது செய்தனா்.

15 அக்டோபர் 2026, 5:03 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

உடன்குடியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாள்களுடன் சுற்றிய 3 பேரை குலசேகரன்பட்டினம் போலீஸாா் கைது செய்தனா்.

பல லட்சம் பக்தா்கள் பங்கேற்கும் தசரா திருவிழா நடைபெற்று வருவதையொட்டி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குலசேகரன்பட்டினம் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையொட்டி, உடன்குடி பஜாா் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் அரிவாள்களுடன் திரிந்த உடன்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சக்திவல் (19), புதுமனைப் பகுதியைச் சோ்ந்த ராபின்சன் (22), மரியம்மாள்புரத்தைச் சோ்ந்த சாந்தகுமாா் (19)ஆகிய மூன்று பேரை குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளா் இன்னோஸ்குமாா், உதவி ஆய்வாளா் முகேஷ் அரவிந்த் ஆகியோா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments