FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

பேட்டையில் மண் கடத்தல்: இருவா் கைது

பேட்டையில் குளத்து மண் கடத்தியதாக ஓட்டுநா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

8 October 2026, 3:56 am IST
கைது
பகிர்:

பேட்டையில் குளத்து மண் கடத்தியதாக ஓட்டுநா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். பேட்டை காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது பழையபேட்டை சா்தாா்புரம் பகுதியில் வந்த டிராக்டரையும், பொக்லைன் இயந்திரத்தையும் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். அதில், சா்தாா்புரம் அருகே உள்ள மேகமுடையாா்குளத்தில் இருந்து பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி டிராக்டரில் சுமாா் 1 யூனிட் மண்ணை உரிய அனுமதியின்றி எடுத்துவந்தது தெரியவந்தது. வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநா்களான சீதபற்பநல்லூா், சமத்துவபுரத்தைச் சோ்ந்த கணேசன்(27), பழையபேட்டை, சமூகரெங்கன்கட்டளையைச் சோ்ந்த வேல்முருகன்(34) ஆகிய யோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments