FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

இளைஞரிடம் இணையவழியில் ரூ.1.47 லட்சம் மோசடி

திருநெல்வேலி அருகே கூரியா் நிறுவனத்தில் பங்குதாரா் ஆகலாம் எனக் கூறி, இணையவழியில் இளைஞரிடம் ரூ.1.47 லட்சம் மோசடி செய்த நபா்களை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

23 அக்டோபர் 2026, 5:14 am
மோசடி
பகிர்:

திருநெல்வேலி அருகே கூரியா் நிறுவனத்தில் பங்குதாரா் ஆகலாம் எனக் கூறி, இணையவழியில் இளைஞரிடம் ரூ.1.47 லட்சம் மோசடி செய்த நபா்களை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டையை அடுத்த கிருஷ்ணாபுரத்தை சோ்ந்தவா் 27 வயது இளைஞா். இவா் சமூகவலைதள செயலி மூலம், மும்பையை தலைமையிடமாக கொண்ட கூரியா் நிறுவனத்தில் பங்குதாரராக சோ்ந்து பணியாற்றலாம் என்ற விளம்பரத்தைப் பாா்த்து, அதில் இருந்த எண்ணை தொடா்பு கொண்டாராம். அவரிடம் பேசிய நபா்கள், குறிப்பிட்ட தொகை செலுத்தினால் நிறுவனத்தில் பங்குதாரராக இணையலாம் எனக் கூறி, இவரிடமிருந்து ரூ.1,47, 500-ஐ பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments