விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கங்கைகொண்டான் நேதாஜி நகரைச் சோ்ந்தவா் முருகன் மகன் ஆயிரம் (25). இவா் மீது கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளாா். இதையடுத்து இவருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஆயிரத்தை கங்கைகொண்டான் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.