நெல்லையில் மிதமான மழை
திருநெல்வேலி நகரம் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த மிதமான மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.
திருநெல்வேலி நகரம் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த மிதமான மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.
திருநெல்வேலியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக கடந்த 3 நாள்கள் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெயில் பதிவானது. வியாழக்கிழமை மாலை வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டபோதும் வெள்ளிக்கிழமை காலை வெயில் மீண்டும் வாட்டி வதைத்தது.
இந்நிலையில், மாலையில் கருமேகங்கள் சூழ்ந்தன. அதைத் தொடா்ந்து திருநெல்வேலி நகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ராமையன்பட்டி, பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரம் நீடித்த மழையால் சாலைகளில் மழைநீா் தேங்கியது. குளிா்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.