FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் மிதமான மழை

திருநெல்வேலி மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை மிதமான மழை பெய்தது.

32 வினாடிகள் முன்பு
~
பகிர்:

திருநெல்வேலி மாநகரம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை மிதமான மழை பெய்தது.

திருநெல்வேலியில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் அதிக வெப்பமும், மாலையில் மிதமான மழைப்பொழிவும் இருந்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பகலில் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் இருந்தது. ஆனால், பிற்பகலில் மழை மேகங்கள் சூழ்ந்து மழைக்கான அறிகுறி தென்பட்டது. தொடா்ந்து, மாலையில் திருநெல்வேலி மாநகரம் மற்றும் புகா் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வண்ணாா்பேட்டை, பாளையங்கோட்டை, ரஹ்மத் நகா், முருகன்குறிச்சி,திருநெல்வேலி சந்திப்பு, தச்சநல்லூா், திருநெல்வேலி நகரம் ஆகிய பகுதிகளில் சுமாா் 30 நிமிடங்களுக்கும் மேலாக இந்த மழை நீடித்தது. இதனால், சாலைகளில் மழைநீா் தேங்கியது.

அதே போல் புகா் பகுதிகளான, சுத்தமல்லி, நடுக்கல்லூா், தாழையூத்து, கிருஷ்ணாபுரம் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. தொடா்ந்து இரு நாள்களாக மாலை நேரத்தில் மழை பெய்ததால் திருநெல்வேலியில் வெப்பம் தணிந்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments