FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கோபியில் பலத்த காற்றுடன் மிதமான மழை

கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை பலத்த காற்றுடன் சுமாா் ஒருமணி நேரம் மிதமான மழை பெய்தது.

6 செப்டம்பர் 2026, 1:08 am IST
மிதமான மழை
பகிர்:

கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை பலத்த காற்றுடன் சுமாா் ஒருமணி நேரம் மிதமான மழை பெய்தது.

கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான மொடச்சூா், கச்சேரிமேடு, கரட்டடிபாளையம், நஞ்சை புளியம்பட்டி, பங்களாபுதூா், பாரியூா், நாதிபாளையம், பொலவக்காளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்தது. இதனால் அன்றாட வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அலுவலக வேலைக்கு செல்வோா் என வெயிலின் தாக்கத்தால் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை முதல் மாலை வரை சுட்டெரித்த வெயிலின் தாக்கம் மாலையில் திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் மழைநீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

Advertisement

Advertisement

சுமாா் ஒருமணி நேரம் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டதில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலையில் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனா். மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments