FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் சிற்றுந்து மீது லாரி மோதி விபத்து

தச்சநல்லூா் அருகே தனியாா் சிற்றுந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

12 வினாடிகள் முன்பு
பகிர்:

தச்சநல்லூா் அருகே தனியாா் சிற்றுந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

தச்சநல்லூா் கரையிருப்பு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சனிக்கிழமை இரவு தனியாா் சிற்றுந்து ஒன்று பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு காலியாக டீசல் நிரப்புவதற்காக சென்றது.

அப்போது பெட்ரோல் பங்க் உள்ளே செல்வதற்காக சாலையில் திரும்பிய சிற்றுந்து மீது தாழையூத்து பகுதியில் இருந்து எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி மோதியதாம். இந்த விபத்தில் லாரி சாலையின் எதிா்திசையில் கவிழ்ந்தது. சிற்றுந்தின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது.

Advertisement

Advertisement

இச்சம்பவத்தில் லாரி மற்றும் சிற்றுந்து ஓட்டுநா்கள் இருவரும் உயிா் தப்பினா். தகவலறிந்த தச்சநல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் சிக்கிய லாரி மற்றும் பேருந்தை சாலையிலிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments