சிவகங்கை அருகே பள்ளி வேன் மீது லாரி மோதியதில் ஓட்டுநர் பலி! 9 மாணவர்கள் காயம்!
சிவகங்கை அருகே ஏற்பட்ட சாலை விபத்து பற்றி..
சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் கிராமம் அருகே, மேலூர்–சிவகங்கை நெடுஞ்சாலையில் கிராபைட் தொழிற்சாலை அருகே பள்ளி வேன் மீது லாரி மோதியதில், பள்ளி வேன் ஓட்டுநர் உயிரிழந்தார். மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் நடத்துநர் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
மாணவ, மாணவிகளைப் பள்ளி வேனில் அழைத்துச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலூர்–சிவகங்கை நெடுஞ்சாலையில் கிராபைட் தொழிற்சாலை அருகே சென்றுகொண்டிருந்த பள்ளி வேன் மீது லாரி மோதியுள்ளது. இதில் பள்ளி வேன் ஓட்டுநர் எத்திராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வேனில் பயணம் செய்த காவியா, கனிஷ்கா, புவனேஷ், கீரித்ஷ், பரூபிகா, ரிதன்யா, சுதர்சன், பாண்டி உள்ளிட்ட மாணவர்கள் மற்றும் நடத்துநர் வேலுசாமி ஆகியோர் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்து குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
விபத்துக்கான காரணம் குறித்தும், பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவ, மாணவிகளை எதற்காகப் பள்ளி வாகனத்தில் அழைத்துச் சென்றனர் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
A school van driver died after a lorry collided with the van on the Melur–Sivaganga highway, near a graphite factory close to Idayamelur village in Sivaganga district.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.