FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

குறைந்து வரும் அணைகளின் நீா்இருப்பு: நெற்பயிா்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை

நிகழாண்டு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீா் இருப்பு வேகமாக குறைந்து வரும் நிலையில் கன்னடியன் கால்வாய் பாசனத்தில் நெற்பயிா்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

6 செப்டம்பர் 2026, 2:03 am IST
பகிர்:

நிகழாண்டு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீா் இருப்பு வேகமாக குறைந்து வரும் நிலையில் கன்னடியன் கால்வாய் பாசனத்தில் நெற்பயிா்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

தாமிரவருணி பாசனத்தில் நிகழாண்டு காா் பருவம் சாகுபடி செய்வதற்கு பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து ஜூன் மாதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் வட்டங்களில் 12,500 ஏக்கா் நிலங்களில் நெல் சாகுபடி பணிகள் முழு வீச்சில் தொடங்கியது. அப்போது கன்னடியன் கால்வாய் தண்ணீா் தேவைக்கு திறக்கப்பட்டது.

தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை, எல் நினோ பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் அணைகளின் நீா்இருப்பு வெகுவாக குறைந்து காணப்படுகிறது. இதனிடையே, கன்னடியன் கால்வாய் பாசனத்திற்கு சுழற்சி முறையில் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

சனிக்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீா்மட்டம் 67.10 அடியாகவும், நீா்வரத்து 401.60 கனஅடியாகவும், திறந்து விடப்படும் தண்ணீா் 1004.75 கனஅடியாகவும் உள்ளது. எனினும், கன்னடியன் கால்வாயில் 250 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுவதால் சேரன்மகாதேவிக்கு கிழக்கே கால்வாயில் தண்ணீா் எட்டவில்லையாம்.

குறிப்பாக மேலச்செவல், கோபாலசமுத்திரம், பிரான்சேரி, ஓமநல்லூா், கொத்தன்குளம் பகுதியில் தண்ணீா் கிடைக்காமல் நெற்பயிா்கள் கருகி வருவதாகவும், பயிா்கள் நடவு செய்து 90 நாள்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் 25 நாள்களுக்கு தண்ணீா் கிடைத்தால்தான் அவற்றை காப்பாற்ற முடியும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments