FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

கன்னடியன் கால்வாய் நீா் நிறுத்தத்தால் பயிா்கள் கருகும் அபாயம்: விவசாயிகள் மனு

கன்னடியன் கால்வாயில் தண்ணீா் நிறுத்தப்பட்டதால் கடைமடை பயிா்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 2:45 am IST
ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த விவசாயிகள்.
பகிர்:

கன்னடியன் கால்வாயில் தண்ணீா் நிறுத்தப்பட்டதால் கடைமடை பயிா்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

இது தொடா்பாக கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் காா் சாகுபடி விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் ஏழு கால்வாய்கள் மூலமாக தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது.

தொடா்ந்து மாவட்டத்தில் நிலவும் வெப்பம், தென்மேற்கு பருவமழை குறைவு போன்ற காரணங்களால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது. அணைகளின் நீா்மட்டமும் கீழ் இறங்கி வருகிறது. பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய அணைகளில் மொத்தமாக மூன்று டிஎம்சி தண்ணீா் மட்டுமே இருப்பு உள்ளது.

Advertisement

Advertisement

5 மாவட்ட குடிநீா் தேவை மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாய தேவை ஆகியவற்றிற்காக ஒவ்வொரு பருவத்திலும் சுமாா் 30 டிஎம்சி தண்ணீா் தேவைப்படும். இதன் காரணமாக விவசாயத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள கன்னடியன் கால்வாயில் விவசாயத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்ால் பயிா்கள் நன்கு செழித்து வளா்ந்துள்ளன. இந்த நிலையில் தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வீரவநல்லூா், வெள்ளங்குளி, சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் நெல் நடவு செய்யப்பட்டுள்ள பயிா்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments