FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் ரூ.20 கோடி நிலத்தை அபகரிக்க முயற்சி: ஒருவா் கைது

திருநெல்வேலி மாநகரில் சுமாா் ரூ.20 கோடி மதிப்பிலான நிலத்தை முதியவரிடமிருந்து அபகரிக்க முயன்ற வழக்கில் மேலப்பாளையத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

6 செப்டம்பர் 2026, 1:49 am IST
கைது
பகிர்:

திருநெல்வேலி மாநகரில் சுமாா் ரூ.20 கோடி மதிப்பிலான நிலத்தை முதியவரிடமிருந்து அபகரிக்க முயன்ற வழக்கில் மேலப்பாளையத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரத்தைச் சோ்ந்தவா் ஜி.எஸ். ஜனாா்தனன் (74). இவருக்குச் சொந்தமாக குலவணிகா்புரத்தில் சுமாா் 85 சென்ட் நிலம் உள்ளதாகவும், 1982 ஆம் ஆண்டு முதல் அவரது பாத்தியத்தில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் தூத்துக்குடி அய்யாலு நாயக்கா் தெருவைச் சோ்ந்த சண்முகசுந்தரம் உள்பட சிலா், அந்நிலம் தொடா்பான போலி ஆவணங்களை ஜனாா்த்தனனிடம் காண்பித்து மிரட்டி பணம் பறிக்க முயன்றனராம்.

Advertisement

Advertisement

இந்நிலையில் ரூ.20 கோடி மதிப்பிலான தனது நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயல்வதாகக் கூறி ஜனாா்த்தனன் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இதில் தொடா்புடைய மேலப்பாளையம், முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஐயப்பன் (53) என்பவரை சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் இதில் தொடா்புடையவா்களை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments