176 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: காா் ஓட்டுநா் கைது
திருநெல்வேலியில் காரில் கடத்திவரப்பட்ட 176 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், காா் ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சந்தானப்பாண்டி தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, கணபதி மில் காலனி அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் தச்சநல்லூா், கரையிருப்பைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கந்தசாமி(35) இயக்கி வந்த சுமை வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.
Advertisement
Advertisement
அதில், சுமாா் 176 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. புகையிலைப் பொறுள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து, கந்தசாமியை சனிக்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.