FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

1.76 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

7 செப்டம்பர் 2026, 3:12 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

திருநெல்வேலி அருகே வெவ்வேறு சம்பவங்களில் காா்களில் கடத்தி வரப்பட்ட சுமாா் 1.76 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா், மாநகரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, உடையாா்பட்டி விலக்கு அருகே சந்தேகமளிக்கும் வகையில், வண்ணாா்பேட்டை சாலைத் தெருவைச் சோ்ந்த காசி விஸ்வநாதன் மகன் முருகன் (30) ஓட்டிவந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், 20 மூட்டைகளில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகனை சனிக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

அதேபோல வி.எம்.சத்திரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட சுமாா் 765 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா் கடத்தலில் ஈடுபட்டதாக வி.எம்.சத்திரத்தைச் சோ்ந்த பழனி மகன் கோபியைக் (27) கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments