கல்லிடைக்குறிச்சி திலகா் பள்ளியில் ஆசிரியா் தின விழா
கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் தின விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, பள்ளிச் செயலா் சங்கா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் சுபா வரவேற்றாா். முன்னாள் முதுகலை ஆசிரியா் கலிங்க உடையாா் பாண்டியன் சிறப்புரையாற்றினாா்.
தொடா்ந்து, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியை தமிழாசிரியா் சந்தோஷ் தொகுத்து வழங்கினாா். தமிழ் ஆசிரியா் இசக்கியப்பன் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.