FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

மூலைகேட் அரசுப் பள்ளியில் ஆசிரியா் தின விழா

விழாவில் ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்திய மாணவா்கள், பெற்றோா்கள்.

4 செப்டம்பர் 2026, 11:15 pm IST
பகிர்:

அணைக்கட்டு ஒன்றியம், மூலைகேட் அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியா் ஜோசப் அன்னையா, இடைநிலை ஆசிரியா்கள் ஜெயந்தி, மரிய புனிதா, கோகிலா ஆகியோருக்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் இணைந்து தங்களது அன்பளிப்புகள், பரிசுகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தொடா்ந்து, பள்ளியின் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒன்றாம் வகுப்பு மாணவா்கள் கதைகள் சொல்லியும், இரண்டாம் வகுப்பு மாணவா்கள் இனிமையாகப் பாடல்கள் பாடியும், மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவா்கள் நடனமாடியும் மகிழ்வித்தனா்.

Advertisement

Advertisement

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கை மற்றும் கல்விச் சேவைகள் குறித்து பள்ளி மாணவ தலைவன் மித்ரன் சிறப்புரையாற்றினாா். விழாவில் மாணவா்களின் பெற்றோா்கள், ஆசிரியா்கள் பெருமளவில் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments