திருவிதாங்கோடு முஸ்லிம் கல்லூரியில் மலர் வெளியீடு
திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரி இஸ்லாமிய ஆய்வு மையம் சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்வும், அத்தாளக்கொட்டு பெருநாள் மலர் வெளியீட்டு விழாவும் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரி இஸ்லாமிய ஆய்வு மையம் சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்வும், அத்தாளக்கொட்டு பெருநாள் மலர் வெளியீட்டு விழாவும் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரித் தாளாளர் எச்.முஹம்மது அலி தலைமை வகித்தார். முஸ்லிம் கல்விச் சங்கத் தலைவர் செய்யதுமுஹம்மது முன்னிலை வகித்தார். பேராசிரியர் அஸீம் வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் எஸ்.டாண் தர்மராய், இயக்குநர் என்.ஞானதாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
Advertisement
Advertisement
இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொதுச் செயலரும், பேராசிரியருமான அப்துல் சமது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.
அத்தாளக்கொட்டு என்னும் மலரை கல்லூரித் தாளாளர் முஹம்மது அலி வெளியிட தொழிலதிபர் எஸ்.மலுக்குமுகம்மது, முன்னாள் மாணவர் ஏ.மாலிக் முஹம்மது ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மலர் குறித்து பேராசிரியர் முஹம்மது அஸ்கர் பேசினார். இஸ்லாமிய ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர் ஹாமீம் முஸ்தபா தொகுத்து வழங்கினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.