FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அருமனை அருகே பேருந்து பழுது: மாணவர்கள் மறியல்

அருமனை அருகே அரசுப் பேருந்து பழுதானதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

அருமனை அருகே அரசுப் பேருந்து பழுதானதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மார்த்தாண்டத்திலிருந்து முக்கூட்டுக்கல்லிற்கு இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து கடந்த சில நாள்களுக்கு முன் டயர் வெடித்து விபத்திற்குள்ளானதையடுத்து இந்தத் தடத்தில் மாற்றுப் பேருந்து இயக்கப்பட்டது.

இந்நிலையில் மாற்றுப் பேருந்தாக இயக்கப்பட்ட பேருந்து திங்கள்கிழமை காலையில் முக்கூட்டுக்கல்லில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட திரளான பயணிகள் இருந்தனர். இப்பேருந்து முதப்பன்கோடு பகுதியில் வந்து போது பழுதாகி நின்று விட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து மாணவர்கள் பேருந்தின் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதி வழியாக வந்த ஒரு சிற்றுந்தையும் சிறைப்பிடித்தனர். இவர்களுக்கு ஆதரவாக முன்னாள் எம்எல்ஏ ஆர். லீமாரோஸ் உள்பட மக்கள் பிரதிநிதிகளும் அங்கு திரண்டனர்.

தகவலறிந்த அருமனை காவல் நிலைய போலீஸார், மார்த்தாண்டம் மற்றும் குழித்துறை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஸ்டாலின், கோபால கிருஷ்ணன் ஆகியோர் பயணிகளிடம் பேச்சு நடத்தி இத்தடத்தில் தரமான பேருந்துகளை இயக்குவதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments