FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து உள்ளாட்சி அலுவலர்களுக்கான கூட்டம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட உள்ளாட்சி அலுவலர்களுக்கான கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட உள்ளாட்சி அலுவலர்களுக்கான கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தலைமை வகித்து பேசுகையில் பொது இடங்களில் கட்சி சார்ந்த கொடிகள், பேனர்கள், விளம்பரங்கள், உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த உள்ளாட்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.  தனியார் இடங்களில் அனுமதியின்றி எந்த வித விளம்பரங்களும் செய்யக்கூடாது என்பது குறித்தும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பான புகார்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான புகார்களை 04652- 278212, 278215, 278218,278219,279218, 278010 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தீர்வு காணலாம்  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

 இக்கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கு.தர்மராஜன்,பத்மநாபபுரம் சார் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் செயல் அலுவலர்கள், ஆணையர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments