FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரூ. 90 லட்சத்துக்கு களியக்காவிளை சந்தை ஏலம்

களியக்காவிளை பேரூராட்சி சந்தை ரூ. 90 லட்சத்துக்கு ஏலம் போனது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

களியக்காவிளை பேரூராட்சி சந்தை ரூ. 90 லட்சத்துக்கு ஏலம் போனது.

களியக்காவிளையில் ஒருங்கிணைந்த காய்கனி மற்றும் மீன்சந்தை உள்ளது. இச் சந்தைக்கான நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமத்துக்கான ஏலம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த ஆண்டு ராஜமணி என்பவர், ரூ. 16 லட்சத்து 50 ஆயிரத்து 207 க்கு ஏலத்தில் எடுத்து சந்தை நுழைவுக் கட்டணம் வசூலித்து வந்தார்.

இந்த நிலையில் நிகழாண்டுக்கான நுழைவுக் கட்டண உரிமத்துக்கான ஏலம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சா. கிறிஸ்டோபர் தாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 16 பேர் பங்கேற்ற இந்த ஏலத்தில் களியக்காவிளை அருகேயுள்ள கைதக்குழி, இலுப்பமூடு பகுதியைச் சேர்ந்த உதயசங்கர் ரூ. 90 லட்சத்துக்கு சந்தையை ஏலத்தில் எடுத்தார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments