கணவாய் மீன்பிடி தடைக்காலம்: குமரி மீனவர்களுக்கு கட்டுப்பாடு
கணவாய் மீன்கள் இனவிருத்தி காலத்தையொட்டி, குமரியில் கணவாய் மீன்களைப் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அறிவித்துள்ளார்.
கணவாய் மீன்கள் இனவிருத்தி காலத்தையொட்டி, குமரியில் கணவாய் மீன்களைப் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை கணவாய் மீன்களின் இன விருத்தி காலமாகும். எனவே, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீன் பிடி விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள், தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்படி, விசைப்படகுகள் 25 பாகம் கடல் ஆழத்துக்கு மேற்பட்ட கடல் பகுதியில்தான் தொழில் செய்ய வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் விசைப்படகுகள் கடற்கரையிலிருந்து 10 கடல் மைல் தொலைவிற்குள் வரக்கூடாது. நாட்டுப்படகுகள் கூட்டமாக, மீன்பிடித்தொழில் புரியும் இடத்தில் மீன்பிடி விசைப்படகுகள் தொழில் புரிய கூடாது.
நிகழாண்டில், கணவாய் மீன் இனவிருத்தி, பருவகாலத்தில், விசைப்படகு மீனவர்களும் நாட்டுப்படகு மீனவர்களும் குறிப்பிட்ட வரையறைக்குள்ளும், சுமுகமாகவும் மீன்பிடித் தொழில் செய்ய கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இந்த விதிமுறைகளை மீறி மீன்பிடிதொழிலில் ஈடுபடும் விசைப் படகுகள் மீது தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ், தொழில் முடக்கம் மற்றும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.