FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாகர்கோவிலில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு கலந்தாய்வுக் கூட்டம்

கன்னியாகுமரியில் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள உலகத் தமிழ் ஆய்வு மாநாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

கன்னியாகுமரியில் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள உலகத் தமிழ் ஆய்வு மாநாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.
குமரி லெமூரியா உலகத் தமிழ் ஆய்வு மையம் சார்பில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு செப். 21முதல் 23ஆம் தேதி வரை 3 நாள்கள் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் நடைபெறுகிறது.
இதையொட்டி நாகர்கோவிலில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்துக்கு உலகத்தமிழ் ஆய்வு மையத் தலைவர் ரவீந்திரா தலைமை வகித்தார்.  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையப் பொதுச் செயலர் பத்மநாபன் முன்னிலை வகித்தார். தெ.தி. இந்துக் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறை தலைவர் துரை.நீலகண்டன், வரலாற்றுத் துறை தலைவர் பகவதிபெருமாள், லட்சுமிபுரம் கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் அழகேசன்,  தட்சிணமாற நாடார் சங்க கல்லூரி பேராசிரியை கிளாரன்ஸ்மேரி, நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஐயாதுரை, துணைத் தலைவர் பொன்னுசாமி,  அதிமுகவைச் சேர்ந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் நிறைவுரையாற்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அழைப்பது; மாநாட்டின் போது திருநயினார்குறிச்சியில் மாநில இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் முன்னிலையில் திருவள்ளுவர் சிலை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments