FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாகர்கோவிலில் கிறிஸ்துமஸ் விழா

நாகர்கோவில் கோட்டாறு ராஜகோகிலா அறக்கட்டளையின் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

நாகர்கோவில் கோட்டாறு ராஜகோகிலா அறக்கட்டளையின் சார்பில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா நடைபெற்றது.
அறக்கட்டளை தலைவர்  ராஜகோபால் தலைமை வகித்தார். பேராசிரியர் பென்னட் வரவேற்றார்.   நாகர்கோவில் வழக்குரைஞர்கள் சங்கத்தலைவர் ஜோசப்பெனடிக்ட், வழக்குரைஞர் ராமசாமி, அரிமா முகமது அலி,  சந்திரஹாசன், பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரித் தலைவர் காமராஜ், குமரி மாவட்ட இந்து நாடார் சங்கப் பொதுச் செயலர் பாரத்சிங்,  கலப்பை சுவாமிநாதன், ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
அகில இந்திய வானொலி நிலைய முன்னாள்  நிகழ்ச்சிப் பொறுப்பாளர் கீழப்பாவூர் சண்முகையா,   மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம்,  முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட், பேராசிரியர் ஜேம்ஸ் ஆர்.டானியேல், உமையொருபாகன், பாவலர் சித்திக், அனுசியாசெல்வி, மதிமுக மாவட்டச் செயலாளர் வெற்றிவேல், ஆகியோர் பேசினர்.
கன்னியாகுமரி வின்சென்ட் அடிகளார் ஆசியுரை வழங்கினார். விழாவில் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்கப்பட்டன. அனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments